சென்னை:-எந்த பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தான் நடிகன் என்பதற்காக எந்தவித தனிப்பட்ட சலுகைகளையும் எதிர்பார்க்கமாட்டார் அஜீத். அப்படிப்பட்டவர் சமீபத்தில் தனது மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பெற்றோர்களை அழைத்தபோது, தனது மனைவி ஷாலினியுடன் அங்கு சென்றிருக்கிறார்.
ஆனால், இவர் பிரபல நடிகர் என்றதும் இவருக்கென்று அமருவதற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்றதாம் ஆனால் அஜீத்தோ அதில் அமர மறுத்து விட்டாராம். மாறாக, மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அமர்ந்திருந்த பகுதியிலேயே தானும் மனைவியுடன் சென்று அமர்ந்து, தனது மகள் மற்றும் மற்ற மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கடைசி வரை அமர்ந்து கண்டு களித்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி