சென்னை:-நடிகர் ஆர்யாவை பல மேடைகளில் பெண்களின் மனம் கவர்ந்தவர், நடிகைகளின் ரியல் ஹீரோ என்று எக்கச்சக்கமாக சொல்லி அவரை குளிப்பாட்டி வந்த பார்த்திபன், தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தமைக்காக ஆர்யாவுக்கு பெண்களை உஷார் பண்ணுவது எப்படி என்றொரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளாராம்.
ஏற்கனவே பெண்களை உஷார் பண்ணுவதில் மன்னரான ஆர்யாவுக்கே இப்படியொரு புத்தகத்தை கொடுத்திருப்பதின் காரணம், இன்னும் அவர் அதுபற்றி அறியாத பல அரிய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானாம். அதையடுத்து அந்த புத்தகத்தை படித்த ஆர்யா, இத்தனை நாளும பெண்களை கவருவது எப்படி என்ற எல்லா விசயமும் எனக்குத் தெரியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பார்த்திபன் சார் கொடுத்த புத்தகத்தை படித்த பிறகுதான், இன்னும் நான் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி