சென்னை:-சினிமா டைரக்டர் கே.பாலசந்தரின் மூத்த மகன், கைலாஷ். ‘மின்பிம்பங்கள்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி. தொடர்களை தயாரித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், கைலாஷ் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் தகனம் இன்று காலை 11 மணி அளவில் பெசன்ட்நகர் மயானத்தில் நடக்கிறது.மரணம் அடைந்த கைலாசுக்கு வயது 54. அவருடைய மனைவி பெயர் கீதா. இவர்களுக்கு விலாசினி என்ற மகளும், விஷ்ணுபாலா என்ற மகனும் இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி