சினிமா டைரக்டர் கே.பாலசந்தரின் மூத்த மகன் கைலாஷ் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. கைலாசுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர்.
கைலாசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார். கைலாஷ் ‘மின்பிம்பங்கள்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி. தொடர்கள் தயாரித்து வந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும் விஷ்ணு பாலா என்ற மகனும் உள்ளனர். கைலாஷ் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று இறுதி சடங்கு நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி