சென்னை:-காதல் படத்தில் அறிமுகமானவர் சுகுமார். மதுரையில் இருந்து சந்தியாவை பரத் சென்னைக்கு அழைத்து வரும்போது அவருக்கு தங்க இடம் கொடுத்து உதவும் நண்பனாக நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
இப்போது காதல் சுகுமார் இயக்குனராகிவிட்டார். முதலில் திருக்குரல் என்ற படத்தை இயக்கினார் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. தற்போது திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதோடு அதில் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்.சூப்பர் ஷோ கிரியேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் சந்திரன், மோகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜித்தின் ரோஷன் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி