இந்த நோய் அதிவேகமாக பரவிவரும் சூழ்நிலையில் சர்வதேச ‘எம்.எஸ்.எப்.’ நிறுவனத்தின் தலைவர் ஜோன்னேவியூ 10 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு ஆப்பிரிக்கா வந்துள்ளார்.எபோலா நோய் பாதித்த நாடுகளை அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த நோய் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.எபோலாவுக்கு பலியானவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்கள் குறித்து மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த இன்னும் 6 மாத காலமாகும்.
போர்க்கால அடிப்படையில் இந்த நோயை விரட்ட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகளும் அவற்றின் மருத்துவ நிபுணர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.இதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி