சூரிச்:-உலக கால்பந்து அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. இதன்படி உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.அர்ஜென்டினா அணி 2–வது இடத்திலும், நெதர்லாந்து அணி 3–வது இடத்திலும், கொலம்பியா அணி 4–வது இடத்திலும், பெல்ஜியம் அணி 5–வது இடத்திலும், உருகுவே அணி 6–வது இடத்திலும் நீடிக்கின்றன.
ஸ்பெயின் அணி 8–வது இடத்தில் இருந்து 7–வது இடத்துக்கு முன்னேறி பிரேசிலுடன் அந்த இடத்தை பகிர்ந்து கொண்டது. சுவிட்சர்லாந்து அணி 9–வது இடமும், பிரான்ஸ் அணி 10–வது இடமும் வகிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி