மும்பை:-நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன சுவிட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகளை வாங்கும் நிறுவனங்கள் சந்தைக்கு வரும் புதுப்புது தயாரிப்புகளை நோக்கி செல்வதால் சிஸ்கோவின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை குறைந்து வருகின்றது. இதனால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி