செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விஷாலுடன் நடிக்கும் பிரபல நடிகைகள்…!

விஷாலுடன் நடிக்கும் பிரபல நடிகைகள்…!

விஷாலுடன் நடிக்கும் பிரபல நடிகைகள்…! post thumbnail image
‘அரண்மனை’ படத்தையடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்திற்கு ‘ஆம்பள’ என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கின்றார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்க, சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.தற்போது இப்படத்தில் சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், கிரண் ஆகியோரும் நடிக்கின்றனர் எனத் தகவல் வந்துள்ளது. இதற்குமுன் சுந்தர்.சி இயக்கிய ‘வின்னர்’ படத்தில் கிரண் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால் நடித்துவரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மூலம் விஷாலே தயாரிக்கிறார். இதற்கு முன் சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் உருவான ‘மத கஜ ராஜா’ சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி