புதுடெல்லி:-இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். அவர் நடித்துள்ள பி.கே. என்ற படத்தின் ஆடியோவை பிரபலப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய அரை நிர்வாண போஸ்டர் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அமீர்கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும்,இந்த படம் கலை மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது. ஆகவே அது அப்படியே இருக்கட்டும். இதில் தடை ஏதும் விதித்தால் அது படத்தயாரிப்பாளரின் உரிமையை பாதிக்கும்.இப்படத்தை பார்க்க விருப்பம் இல்லையென்றால் அதை நீங்கள் பார்க்காதீர்கள். அதற்குப்பதிலாக மதத்தை இதில் கொண்டு வராதீர்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி