புதுடெல்லி:-பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
டோனிக்கு பத்ம பூஷன் விருதும் கோலிக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்குவதற்கு விளையாட்டு அமைச்சகத்திற்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேப்டன் டோனி 2009ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். அவரது தலைமையில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதையடுத்து அவருக்கு இந்த முறை பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதேபோல் 2008ல் அறிமுகமான விராட் கோலி, கிரிக்கெட்டில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். அவர் இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் 19 சதம்உள்பட 5634 ரன்கள் குவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி