இந்நிலையில் கத்தி படத்தை எதிர்க்காமல் சீமான் அமைதி காப்பதன் பின்னணியில் லைகா மொபைல் நிறுவனமே சீமானின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக இணையதளங்களில் பரபரப்பாகச் செய்திகள் பரவி வருகின்றன.இது தொடர்பாக சீமான் கூறுகையில், கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ, கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன்.
அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல. இரண்டு வருடங்களாக கலைப்புலி தாணு என்னைப் படம் பண்ணச் சொல்லி வருகிறார். அப்படியிருக்க அடுத்த நிறுவனத்துக்கு நான் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
எதையாவது வம்படியாகக் கிளப்பிவிட்டடால் சீமான் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார் என யாரும் கனவு காண வேண்டாம்.எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம். சீமான் எதற்கு கத்தி படத்தை எதிர்க்கவில்லை என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைகா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும். என ஆவேசமாகச் சொன்னார் சீமான்.
இதனிடையே கத்தி படத்தை சீமான் எதிர்க்காததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தை லைகா நிறுவனமே தயாரிக்கப் போவதாகவும் ஆனால், அதில் நாயகனாக விஜய் அல்ல சிம்பு நடிக்கவிருப்பதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. கத்தி படத்தை ஆதரித்தாலோ அல்லது எதிர்க்காமல் இருந்துவிட்டாலோ நடிகர் விஜய்யின் ரசிகர்களை தன்னுடைய அரசியல் பாதையில் இணைக்கலாம் என்றும் அது தன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் சீமான் கருதுவதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி