மும்பை:-வெளியான முதல் வாரத்தில் 100 கோடி ரூபாய், இரண்டாவது வாரத்தில் 200 கோடி ரூபாய், மூன்றாவது வாரத்தில் 300 கோடி ரூபாய் வசூல் என சல்மான் கான் நடித்த ‘கிக்’ படம் கோடி மேல் கோடியாக அள்ளிக் கொண்டிருக்கிறது.படம் வெளிவந்த நாள் முதல் இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 220 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் கிடைத்திருக்கிறதாம்.
வெளிநாடுகளில் மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். இத்தனைக்கும் இந்தப் படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘கிக்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குனரான சஜித் நடியவாலாவிற்கு முதல் படம்.
பாகிஸ்தானிலும், அரபு நாடுகளிலும் இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு மட்டும் வசூலான தொகை 25 கோடி ரூபாயாம். இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே இதுவரை அதிக வசூலைக் குவித்துள்ள படம் இதுதான். தனது முந்தைய படங்களின் வசூல் சாதனையையும் சல்மான் இந்தப் படம் மூலம் முறியடிப்பார் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி