கடந்த முறை இயக்குனர் அமீர் தலைமையிலான நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். இந்த முறை அமீர் போட்டியிடவில்லை. இதனால் செயலாளராக இருந்த ஜி.சிவா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து சண்டை இயக்குனர் சிவா போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ், உமா சங்கர் பாபு போட்டியிட்டனர்.நேற்று நடந்த தேர்தலில் ஜி.சிவா 49 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு கே.ஆர்.செல்வராஜ் 44 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
பொருளாளராக எஸ்.சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் தவிர துணை தலைவர்களாக ஜீவானந்தம், மூர்த்தி, ராமன், சபரிகிரிசன், சம்பத், ஆகியோரும், துணை செயலாளர்களாக தனபால், ராதா, ராஜா, ரமணபாபு, ஸ்டாலின் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்வு பெற்றவர்கள் நேற்று மாலையே பதவியேற்றுக் கொண்டனர். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் சங்க பொருளாளர் வி.சேகர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை நேரில் வாழ்த்தினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி