மும்பை:-தீபிகா படுகோனே, தான் நடிக்கும் புதிய இந்தி படமான ஃபைண்டிங் ஃபன்னி படப்பிடிப்பிற்காக கோவாவில் தங்கி உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகளை பிரத்யேகமாக சமைத்துக் கொடுப்பதற்காக கோவாவைச் சேர்ந்த சமையல்க்காரர் ஒருவரை தீபிகா நியமித்துள்ளார்.
முதலில் தீபிகா மட்டும் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தார். தற்போது இவரது உணவின் ருசி பிடித்து விட்டதால், படக்குழுவில் உள்ள ஒவ்வொரு வரும் தனக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து தர பட்டியல் அளித்து விட்டனராம். இதனால் திட்டமிட்டபடி வேலை நடைபெறாமல் பாதிக்கப்படுவதால் செலவு கூடுதலாக ஆவதால், படப்பிடிப்பு முடிந்த பிறகு இத்தகைய விருந்துகளை வைத்துக் கொள்ள தயாரிப்பாளர் தினேஷ் விஜயன் முடிவு செய்துள்ளார்.இதனால் தயாரிப்பாளரின் செலவை குறைப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த பிறகு, தீபிகாவே அனைவருக்கும் தனது சொந்த செலவில் கோவா உணவு வகைகளை விருந்தாக அளித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி