சென்னை:-இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டாணா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் சமீபத்தில் சான்சே இல்ல என்னும் மியூசிக் ஆல்பம் வெளியானது. இந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது. யூடியூபிலும் இதன் வீடியோவை அதிக பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
இசையை தவிர அனிருத் தற்போது சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம்காட்டி வருகிறார். இவர் புதியதாக டுகாட்டி சைக்கிளை வாங்கியுள்ளார். இதை தனது சமூக வலைத்தளத்தில், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு தன்னுடைய நள்ளிரவு நண்பன் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே டுகாட்டி சைக்கிளை அஜீத் தனது நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அதேபோல் ஆர்யாவும் மிகாமன் படப்பிடிப்பு தளத்தின்போது உடலை சரியாக வைத்துக் கொள்ள டுகாட்டி சைக்களை உபயோகித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இணைந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி