செய்திகள்,திரையுலகம் 20 வருடங்களை கடந்த ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’!…

20 வருடங்களை கடந்த ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’!…

20 வருடங்களை கடந்த ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’!… post thumbnail image
மும்பை:-சல்மான் கான், மாதுரி தீட்சித் நடித்த படம் ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’. 1994ம் ஆண்டு சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தை சல்மான் கானுக்காக ரசித்தார்களோ, இல்லையோ மாதுரி தீட்சித்திற்காக ரசித்தவர்கள்தான் ஏராளம். அடுத்தது பாடல்கள், ராம் லட்சுமண் இசையமைப்பில் லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய அனைத்துப் பாடல்களுமே இந்தப் படத்தில் சூப்பர் ஹிட்டாகி இன்று வரை ரசிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படம் வெளிவந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

மும்பையில் ஒரு திரையரங்கில் மட்டும் 100 வாரங்களைக் கடந்து இந்தப் படம் ஓடியது. வெறும் 4 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் சுமார் 120 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புரிந்தது. படம் வெளியான போது மிகப் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்து ஒரு சில நாட்களுக்குள் பிக்கப் ஆகி இந்தியா முழுவதுமே வெற்றிகரமாக ஓடியது. பாலிவுட்டில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி