மான்ட்ரியல்:-ரோஜர்ஸ் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நம்பர் ஒன் வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் பிரான்சின் சோங்காவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் வாவ்ரிங்கா 6-7 (8-10), 5-7 என்ற நேர்செட்டில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனிடம் சரணடைந்து நடையை கட்டினார். பெண்கள் ஒற்றையரிலும் இரு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் வெளியேற்றப்பட்டனர்.விம்பிள்டன் சாம்பியன் கிவிடோவா 4-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவாவிடமும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ரஷியாவின் மரியா ஷரபோவா 2-6, 6-4, 2-6 என்ற செட்டில் ஸ்பெயினின் சுரேஸ் நவரோவிடமும் பணிந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி