இதைக்கேட்ட மேக்ஸ் அலிசியாவிடம் கவலைப்படாதே, என்னுடைய கேமராவில் நான் பதிவு செய்து தருகிறேன் என்று கூறுகிறார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடையும் அலிசியா மேக்சை உடனே செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதனால் தனது தம்பியான நாதனிடம் பட்டமளிப்பு விழாவை வீடியோ எடுக்கும் படி சொல்லிவிட்டு அலிசியாவுடன் பாழடைந்த தொழிற்சாலை ஒன்றை படம் எடுக்க செல்கிறார் மேக்ஸ்.அப்போது டெக்சாஸ் நகரில் சூறாவளி காற்று தாக்கப்போவதாக தகவல் வருகிறது. சூறாவளியை படம்பிடிக்க அதிநவீன வாகனத்துடன் சாரா வேய்னே தனது குழுவுடன் வருகிறார். முதலில் சிறியதாக ஆரம்பிக்கும் சூறாவளி காற்று பின்னர் மேலும் வலுவடைந்து 300 கி.மீ வேகத்தில் பூமிக்கும் வானத்தும் இடையே சுழன்று வந்து டெக்சாஸ் நகரை தாக்கி முற்றிலும் அழித்து விடுகிறது.
பட்டமளிப்பு விழா நடைபெறும் கல்லூரியில் உள்ள அனைவரும் ரிச்சர்ட்டின் அறிவுரைப்படி தப்பிக்கிறார்கள். ஆனால் மேக்ஸ் இல்லாததை கண்டு அவரை தேட ஆரம்பிக்கிறார் ரிச்சர்ட். அப்பொழுது மேக்ஸ் மற்றும் அலிசியா இருவரும் தொழிற்சாலையில் சிக்கியிருப்பதாகவும் உயிருக்கு போராடி வருதாகவும் தகவலை அறிகிறார்.இவர்களை காப்பாற்ற ரிச்சர்ட் முயற்சி செய்கிறார். ஆனால் சூறாவளி காற்றால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. இறுதியில் ரிச்சர்ட் அங்கு சென்று மேக்ஸ் மற்றும் அலிசியாவை உயிருடன் மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
மனிதர்கள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி என்னன்னவோ செய்கிறார்கள். ஆனால் இயற்கை மனிதனின் வாழ்க்கையை ஒரு சில மணி நேரத்திலேயே தவுடுபொடியாக்கி விடுகிறது என்பதை ஒரு நாளில் நடக்கக்கூடிய கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்டீவன் குவேல். சூறாவளி காற்றை நம்மால் பார்க்க முடியாத நிலையில் இப்படம் நம்மை முழுமையாக திருப்திபடுத்தும் படமாக இருக்கும்.ஒரே நேரத்தில் பல சூறாவளி தொகுப்பு சுற்றி வளைத்து தாக்குவது, தரையில் இருந்து கண்டெய்னர்கள், கார்கள், விமானங்கள் எல்லாம் சூறாவளி காற்றுக்குள் சிக்கி விண்ணை நோக்கி பறப்பது போன்ற காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘மரணப்புயல்’ புயலின் கோரம்……….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி