செய்திகள்,திரையுலகம் பிரியா ஆனந்தைத் தொடர்ந்து சரக்கு அடித்த நடிகை லட்சுமி ராய்!…

பிரியா ஆனந்தைத் தொடர்ந்து சரக்கு அடித்த நடிகை லட்சுமி ராய்!…

பிரியா ஆனந்தைத் தொடர்ந்து சரக்கு அடித்த நடிகை லட்சுமி ராய்!… post thumbnail image
சென்னை:-விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி படத்தில் ஒரு காட்சியில் சரக்கு அடிப்பது போல் நடித்திருந்தார் நடிகை பிரியாஆனந்த். அதையடுத்து ஒரு தமிழ் நடிகை இப்படி நடிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தன மீடியாக்கள். அதற்கு, ஆண், பெண் இருவரும் சரிசமம் என்பதை சொல்லத்தான் அப்படியொரு காட்சி வைத்தேன் என்று அப்பட டைரக்டர் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், அதர்வா நடித்துள்ள இரும்புக்குதிரை படத்தில் அதே ப்ரியா ஆனந்தே நாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக நடித்துள்ள ராய்லட்சுமி, ஒரு பாடல் காட்சியில் ஷோலோ ஆட்டம் போடுபவர், பாடல் முடிகிறபோது, சரக்கு அடித்துக்கொண்டு நிற்கும் அதர்வாவிடம் வந்து, ஒரு கிளாசை கையில் எடுப்பார்.அப்போது, தனக்குத்தான் அவர் தரப்போகிறார் என்று பார்ப்பார் அதர்வா. ஆனால், ராய்ல ட்சுமியோ, அந்த கிளாசை தனது வாயில் வைத்து ஏக் தம்மில் காலி பண்ணி விட்டு கீழே வைப்பார். அதை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நிற்கும் அதர்வா, தலையில் அடித்துக்கொண்டு ராய்லட்சுமி பின்னாடியே நடப்பார்.

இந்த காட்சியில் ராய்லட்சுமி நடித்திருப்பது, படம் திரைக்கு வரும்போது சர்ச்சையை உருவாக்கும் என்று சிலர் கூறி வருகிறார்கள். அதற்கு ராய்லட்சுமியோ, நான் சரக்கு அடித்ததை சர்ச்சையாக்கினால், அதர்வா சரக்கு அடித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னவர், அப்படியொரு நிலை வரும்போது நானும் இதை உரிமை பிரச்சினையாக்குவேன் என்று சர்ச்சையை எதிர்கொள்ள இப்போதே தயாராகி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி