சென்னை:-மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. நடிகை ஸ்ரீபிரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா நடித்த இந்தப் படம் கடந்த மாதம் வெளிவந்தது.சுமார் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து 11 கோடி ரூபாய் வரை லாபத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரை 9 கோடி ரூபாய் பட்ஜெட் எல்லாம் சாதாரண பட்ஜெட். அங்கு தயாராகும் படங்கள் பெரும்பாலும் 25 கோடியைத் தாண்டித்தான் இருக்கும். அப்படியே 10 கோடிக்குள் தயாராகும் பல படங்கள் நல்ல வசூலைக் கொடுப்பதில்லை. ஆனால், ‘த்ரிஷ்யம்’ படம் குடும்பக் கதையாக இருந்து, இப்படிப்பட்ட வசூலை அள்ளிக் கொடுத்திருப்பது பெரிய விஷயம்தான் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி