மும்பை:-அமீர்கானின் புதிய படமான பிகே.விற்காக அவர் நிர்வாணமாக, டேப்ரிக்கார்டரால் மறைத்தபடி நிற்பது போன்ற போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் ஹீரோ அமீர்கானுக்கு எதிராக மட்டுமின்றி அந்த படக்குழுவினருக்கும் எதிராக பெரும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது.
அமீர்கானுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக சமீபத்தில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கேள்வி எழுப்பினார். அப்போது ஷாருக்கான் பேசுகையில், அமீர்கான் தனது இடுப்புக்கு கீழ் ஏதும் வைக்கவில்லை என்றால் அப்போது தான் அது ஆபாசம். இடுப்புக்கு கீழ் ஏன் அதை வைத்துள்ளார் என்பதை தான் உலகத்தார் சர்ச்சையாக்கி பார்க்கிறார்களோ என கிண்டலாக கூறி சிரித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி