சென்னை:-தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘காக்கி சட்டை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம்தான் இதனை இயக்குகிறார்.
இந்நிலையில் படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பவர்ஃபுல் வில்லன் கேர்கடரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரணும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறாராம்.‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு இசையமைத்த டி.இமான் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மத்தியில் தொடங்க இருக்கிறது. படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி