முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர நினைத்த இவர், தற்போது முன்னணி கதாநாயகிகள் இவருடன் ஜோடி சேர நினைத்து வருகிறார்கள். சமீபத்தில் சிவகார்த்திகேயன் – ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ படம் 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு படவாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் ‘டாணா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்து வருகிறார். அதன்பிறகு ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரஜினி ரசிகராக நடிக்கிறார். மேலும் பல கெட்டப்புகளில் ரஜினி சாயலிலேயே தோன்றுகிறாராம். இப்படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகையுடன் நடிக்க விரும்புவதாகவும், அதற்காக சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது சமந்தா விஜய்யுடன் கத்தி, சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமந்தா படங்களில் பிசியாக இருப்பதால் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது குறித்து இன்னும் முடிவு சொல்லவில்லையாம். இருப்பினும் அவரது பதில் சிவகார்த்திகேயனுக்கு சாதகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி