‘அஞ்சான்‘ பட வெளியீட்டை முன்னிட்டு சூர்யா விரைவில் ஆரம்பிக்கப் போகிறார். அதே சமயம், அஜித், விஜய் ரசிகர்கள் அவர்களது அபிமான நட்சத்திரங்களின் பெயரில் பல டுவிட்டர் கணக்கை நடத்தி வருகிறார்கள். ‘கோச்சடையான்’ பட வெளியீட்டின் போது ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.படம் வெளியான பின் டுவிட்டரில் ரஜினி எந்த கருத்தையும் பகிரவில்லை.
பெரும்பாலும் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களில் நடிகைகள்தான் மிகவும் ‘ஆக்டிவ்’வாக இருக்கிறார்கள். அவர்களில் சமந்தா, திரிஷா குறிப்பிட வேண்டியவர்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை ஸ்ருதிஹாசன் அதிகமான டுவிட்டர் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10,22,000 பேர். தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பவர் தனுஷ், அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 8,69,000.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி