தந்தையாக நடிக்கும் சமுத்திரகனி இதனை சுட்டிக்காட்டி தனுசை தண்டச்சோறு என திட்டுகிறார். இதற்கு தனுஷ் பதில் அளிக்கும் போது, தம்பியைபோல என்னை செயின்ட் ஜான்ஸ் பள்ளியிலா சேர்த்தீர்கள். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள். அதனால் ஆங்கிலம் சரளமாக என்னால் பேசமுடியவில்லை. வேலையும் கிடைக்கவில்லை என்று வசனம் பேசுவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த வசனத்துக்கு ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்கள். இந்த வசனக்காட்சி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் காவிதாசன் தெரிவித்து உள்ளார். வசனக் காட்சியை நீக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னொரு முன்னாள் மாணவர் கூறும்போது, ‘ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்து விட்டு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். ஆனால், தனுஷ், வயிறுமுட்ட மது குடிப்பதும், சிகரெட் பிடிப்பதுமாக இருக்கிறார்’ என்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் மாணவர், பிரதமர் நரேந்திர மோடியும் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இரு வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்று பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்த பள்ளியில் படித்த பல பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், ஆங்கில பேராசிரியர்களாவும் பணியில் உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பாரம்பரியமானது. இந்தியா முழுவதும் 150 கல்வி நிறுவனங்களுடன் இது செயல்படுகிறது. நல்ல தலைவர்களை இப்பள்ளி உருவாக்கி வருகிறது. இந்த படத்தை இயக்கிய டைரக்டருக்கும், இதில் நடித்த தனுசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடித்த காட்சி போஸ்டர்களில் அச்சிட்டு ஓட்டப்பட்டதற்கு புகையிலை ஒழிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி