அதையடுத்து, இப்போது அஜீத்தின் 55வது படத்திலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.இந்நிலையில், வேறு புதிய படங்களில் இன்னும் கமிட்டாகாத த்ரிஷாவை, குயின் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகர் தியாகராஜன் அழைத்து பேசினாராம்.
அப்போது, ஜெயம்ரவி படத்தை அடுத்து, இப்போது தல அஜீத்துடன் நடிக்கிறேன். அதனால் என் மார்க்கெட் இன்னும் கெட்டியாகவே உள்ளது. அதனால், ஒன்னேகால் கோடி சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்று முதல் சுற்று பேச்சுவார்த்தையிலேயே தனது நிலையை ஓப்பன் பண்ணி விட்டாராம் த்ரிஷா. அதைக்கேட்டு மிரண்டு போன தியாகராஜன், மேற்கொண்டு த்ரிஷாவிடம் எதுவும் பேசவில்லையாம். தொடர்ந்து பரிசீலனை நடக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி