அதோடு இயக்குனர் பாலா விரும்பியவாறு வரலட்சுமி தன் உடல் எடையையும் 10 கிலோ குறைத்துள்ளாராம். இந்நிலையில், தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி கதைப்படி விலைமாதுவாக நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக பாலா, அவரை ஒரிஜினல் கரகாட்டக்காரி மட்டுமின்றி, ஒரிஜினல் விலைமாது போலவும் செதுக்கிக்கொண்டிருக்கிறாராம்.
மேலும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த வரலட்சுமி, போடா போடி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் டப்பிங் பேச தயாராகி வருகிறாராம். இந்தியில் ‘டிடே’ படத்தில் விலைமாதுவாக நடித்து ஸ்ருதி ஹாசன் பரபரப்பை ஏற்படுத்தியதை போன்று வரலட்சுமியும் தற்போது பரபரப்பை ஏற்படுத்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி