சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார்.
கதைப்படி அஜீத்தின் பிளாஷ்பேக் கதையில் அவருக்கு ஜோடியாக திரிஷா வருகிறார். இருவருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற கதை. இதில் நடிக்க பல நாட்களாக குழந்தை நட்சத்திர தேர்வு நடந்தது. இதில் மலையாள படங்களில் சுட்டிக் குழந்தையாக கலக்கி வரும் அனிகா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி