செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா!…

காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா!…

காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியா!… post thumbnail image
கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கப்படியலில் 7வது இடத்தில் இருந்தது.நேற்று மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. முதல் தங்கத்தை அமித் குமார் பெற்றுத்தந்தார். அவர், ஆண்கள் பிரிவு 57 கிலோ பிரிவில் எபிக்வெமினோமோ வெல்சனை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனை வினேஸ், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை, மகளிர் 48 கிலோ பிரிவில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.3வது தங்கத்தை சுஷில்குமார் பெற்றார். அவர் 74 கிலோ பிரிவில், பாகிஸ்தானின் அப்பாசை வீழ்த்தி இந்தியாவுக்கு 10வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.85 கிலோ பளுதூக்குதல் பிரிவில், இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தம் 125 கிலோபிரிவில் இந்திய வீரர் ராஜீவ் தோமர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பளூதூக்குதல் பிரிவில் சந்திரகாந்த் வாளி வெண்கலப்பதக்கம் வென்றார்.துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் ரேபிட் பைபர் பிரிவில், ஹர்ப்ரீட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.ஆண்கள் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் மனவ்ஜீத் சந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப்பதக்கம் வென்றார்.இதன் மூலம், இந்தியா 10 தங்கம், 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி