இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. புஜாரா (24), முரளி விஜய் (35), விராட் கோலி (39), ரோகித் சர்மா (28) ஆகியோர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத நிலையில், கடும் சிரமத்திற்கிடையே ரகானே அரை சதம் கடந்தார். இதனால் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய ரகானே 54 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க வேண்டுமானால் 150 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த நெருக்கடியான சூழ்நிலையில் டோனியுடன் ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி பாலோ ஆனை தவிர்க்க போராடினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி