செய்திகள்,விளையாட்டு இந்தியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட்: பாலோ–ஆன் ஆனது இந்தியா!…

இந்தியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட்: பாலோ–ஆன் ஆனது இந்தியா!…

இந்தியா–இங்கிலாந்து 3–வது டெஸ்ட்: பாலோ–ஆன் ஆனது இந்தியா!… post thumbnail image
சவுதம்டன்:-இந்தியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் தாக்குதல் தொடுத்தது. ஸ்டம்பை குறி வைத்து சரியான உயரத்தில் பந்து வீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த அவர்கள், அவ்வப்போது பவுன்சர்களாக போட்டு திணறடித்தனர்.

இதனால் இந்திய வீரர்கள் தடுப்பாட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தினர். ஆனாலும் நீண்ட நேரம் நிலைகொள்ள முடியவில்லை. இது இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. நேற்று 80 ஓவர்கள் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டோனி (14 ரன்), ரவீந்திர ஜடேஜா (10 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய அணி பாலோ–ஆன் ஆபத்தை தவிர்க்க மொத்தம் 370 ரன்கள் சேர்த்தாக வேண்டும் என்ற நோக்கி விளையாடினர்.

ஆனால் இந்திய அணி 330 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரெகானே 54 ரன்களும், டோனி 50 ரன்களும் அடித்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி