ஆனால், தொடர்ந்து அவரை படத்தில் நடிக்க வைக்க யாருமே முன் வரவில்லையாம். தன்னையெல்லாம் சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு நடிகனாகவே பார்க்கவில்லை என்கிறார் தனுஷ். தொடர்ந்து படிக்கவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் தவித்த தனுஷை, அவருடைய அண்ணன் செல்வராகவன் ‘காதல் கொண்டேன்’ படத்தில் நாயகனாக்கினார். அந்த படத்தின் வெற்றி தனுஷை ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது.இப்போது ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது, ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் ஹிந்தியில் வரவேற்பு, அமிதாப்புடன் ‘ஷமிதாப்’ என ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு இந்திய அளவிலும் உயர்ந்து நிற்கிறார் தனுஷ்.
கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி, திறமைசாலி என்பதை தனுஷ் நிரூபித்திருக்கிறார்.முன்னதாக ஜூலை 28ம் தேதி தனது 31வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். சமீபத்தில் இவரது வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டாகி இருப்பதால் அதையும் சேர்த்து இந்த பிறந்தநாள் விழாவில் கொண்டாடினார். இதில், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி