அதனால் அஜீத் மற்றும் அவருக்கு மகளாக நடிக்கும் அனிகாவுடன் த்ரிஷா நடிக்கும் காட்சிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை அம்மா வேடங்களில் நடித்திராத த்ரிஷா, முதன்முறையாக அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் சில டேக்குகளை வாங்கினாலும், எதிர்பார்த்தபடி நடித்து கைதட்டல் வாங்குகிறாராம்.
மேலும், இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார். இவர் அஜீத் நடித்த காதல் கோட்டை உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தவர். அதனால் ஒரு செண்டிமென்டடுக்காக கடைசி நேரத்தில் அவரையும் அழைத்து ஒரு ரோல் கொடுத்திருக்கிறார்களாம். பல வருட இடைவேளைக்குப்பிறகு, திடீரென்று அஜீத் செய்த சிபாரிசின் பேரில் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததால் சந்தோசத்தில் தடுமாறிப்போனாராம் தலைவாசல் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி