ரிலீஸுக்கு முன்பே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் படம். உலகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமை சுமார் 125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். படத்தின் ஆடியோ உரிமை சுமார் 12 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமை சுமார் 65 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். வெளியீட்டிற்கு முன்பே படத்தின் வியாபாரம் இந்த அளவுக்கு நடைபெற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஓம் சாந்தி ஓம்’ வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாலும், ஷாரூக் – தீபிகா ஜோடி திரையில் மிகவும் பொருத்தமாக இருப்பதாலும் இந்தப் படமும் உலக அளவில் சாதனை புரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.வரும் ஆகஸ்ட் 15 அன்று இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கிலும் இப்படம் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி