இந்நிலையில், இனி தெலுங்கு படங்களிலும் கிளாமராக நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சமந்தா. அவர் வட்டம் போட்டு நடித்து வந்தபோதே அவருடன் போட்டி போட முடியாமல் விலகி நின்ற ஆந்திர ஹீரோயின்கள், அவர் கவர்ச்சி காட்டி நடித்தால் நம்மையெல்லாம் கட்டம் கட்டி அடிப்பாரே எனறு அனைத்து நடிகைகளும மிரண்டு போய் நிற்கிறார்களாம்.
மேலும், சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சி பிரவேசம் கண்டு அவரது அபிமானத்திற்குரிய இளவட்ட ஹீரோக்கள் அவரிடம் இன்னும் அதிகப்படியான கரிசனம் காட்டத் தொடங்கியிருப்பதோடு, சிபாரிசுகளையும் முடுக்கி விட்டுள்ளார்களாம். இதனால் சமந்தாவுக்கான புதிய படங்கள் அவரது டைரியை வேகமாக புல் பண்ணி வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி