வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2004–ம் ஆண்டு சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரோபோவுடன் கூடிய விண்வெளி வாகனத்தை அனுப்பி வைத்தது.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ள இது அனுப்பபட்டது. தற்போது அந்த விண்வெளி வாகனம் 40 கிலோ மீட்டர் (25 மைல்) பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது இது செவ்வாய் கிரத்தில் என்டீவர் எரிமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. சோவியத் ரஷியா சந்திரனுக்கு லுனோக்காட்–2 என்ற ஊர்தியை விண்கலம் மூலம் அனுப்பியது. அது கடந்த 1973–ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அங்கு தரை இறங்கியது.அங்கு 5 மாதத்துக்கும் குறைவாக 39 கிலோ மீட்டர் தூரம் (24.2 மைல்) பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டது. அதுவே மிகப்பெரும் சாதனையாக இதுவரை கருதப்பட்டது.தற்போது அதன் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டதாக நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். இந்த வாகனம் இவ்வளவு தூரம் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. 1 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்ய வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி