நியூயார்க்:-அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் பூட்டிய காருக்குள் 6 வயது குழந்தையை விட்டு விட்டு நக அலங்காரம் செய்யச் சென்ற தாயை போலீசார் கைது செய்தனர்.எஞ்சின் அணைக்கப்பட்டிருந்த அந்த காரினுள் 140 டிகிரி அளவுக்கு வீசிய அனலை தாங்கிக் கொள்ள முடியாத அந்த குழந்தை அலறி அழுததை தூரத்தில் இருந்து கவனித்த கனெக்டிக்ட் போலீசார் காரை திறந்து குழந்தையை மீட்டனர்.
அப்பகுதியில் இருந்த அழகு நிலையத்தில் கை விரல் நகங்களை அழகுபடுத்திக் கொண்டிருந்த அந்த குழந்தையின் தாயை தேடி கண்டு பிடித்த போலீசார் ரஷீனா பிரான்சிஸ் என்ற அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி