சென்னை:-அன்னக்கொடி படத்திற்கு பிறகு இயக்குநர் பாரதிராஜா, புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு ‛நேற்றைக்கு மழை பெய்யும்’ என தலைப்பு வைத்துள்ளார். இயக்குநர் சேரன், ஹீரோவாக நடிக்கிறார், இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார்.
தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளில் பாரதிராஜா மும்முரமாக இருக்கிறார், கூடவே ஹீரோயின் வேட்டையும் நடந்து வருகிறது. ஓவியா அல்லது ‛வழக்கு எண்’ மனீஷா யாதவ் நடிக்கலாம் என தெரிகிறது. காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும் பாரதிராஜா வெளியிட உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி