சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அஜித்தின் 55வது படத்தின் படப்பிடிப்பில் அஜீத், திரிஷா சம்பந்தப்பட்ட திருமண காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக இப்படத்தில் நடிக்கும் தேவி அஜீத் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் தலைவாசல் விஜய்யும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தலைவாசல் விஜய், அஜீத்துடன் ஏற்கெனவே காதல் கோட்டை படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி