இதுபற்றி அவர் கூறியதாவது: நான் ஹரிகேன் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் ஹாலிவுட் படங்களை தயாரிக்க இருக்கிறேன். சினிமா பரம்பரையில் இருந்து வந்ததால் என்னிடம் சினிமா ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. சர்வதேச அளவில் படம் தயாரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.முதல் கட்டமாக பிரமென் டவுன் மியூசிசியன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ஒரு மியூசிக்ல் சினிமா எடுக்க இருக்கிறோம். இது 45 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இசை சம்பந்தமான படம் என்பதால் உலக புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இசை அமைக்க பேச்சு நடந்து வருகிறது. இதுதவிர வோல்பெல் என்ற அனிமேஷன் படத்தை தயாரிக்க இருக்கிறோம். இதில் இந்திய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இரு படங்களும் உலக அளவில் பேசப்படுகிற படமாக இருக்கும். என்கிறார் பிரபாகரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி