அந்தவகையில் அப்பாக்களுக்கு அவரைக்கண்டாலே ஆகாது. அம்மாக்கள்தான் தனுஷை அரவணைத்து செல்வார்கள், அதேபோல்தான், தற்போது தனுஷ் நடித்து வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்திலும் வார்த்தைக்கு வார்த்தை அப்பா சமுத்திரக்கனி தண்டச்சோறு என்று சொல்லும் வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.கதைப்படி தனுசுக்கு அப்பாவாக நடித்திருக்கும் டைரக்டர் சமுத்திரகனி, முதல் காட்சியில் முதல் டயலாக்கே தூங்கிக்கொண்டிருக்கும் தனுஷை ஏய் உருப்படாதவனே எழும்புடா என்றுதான் சொல்வார். அதிலிருந்தே படித்து விட்டு வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் தனுஷை தண்டச்சோறு தண்டச்சோறு என்று சீன் பை சீன் திட்டித்தீர்ப்பார் சமுத்திரகனி.
ஆனால், இப்படி அப்பா கேரக்டர் தன்னை திட்டித்தீர்க்கும் படங்கள் எல்லாமே தனக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால், இந்த மாதிரி வசனங்கள வேண்டும் என்று கேட்டே வாங்கினாராம் தனுஷ். ஆக, வேலையில்லா பட்டதாரி படத்தில் சமுத்திரகனி வார்த்தைக்கு வார்த்தை திட்டியது மட்டுமின்றி, அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா, தனுஷை ஒரு காட்சியில் கன்னத்தில் அறைந்தது மட்டுமின்றி, இன்னொரு காட்சியில் துடப்பக்கட்டையால் பின்னி எடுத்திருக்கிறார். ஆக, இப்படம் சூப்பர் ஹிட்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முழு நம்பிக்கையில் இருக்கிறார் தனுஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி