நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவரது கணவர் மைக்கேல் ஜான்சன். இவர் அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்தார்.இதனால் நுரையீரல் புற்று நோய் பாதித்த அவர் கடந்த 1996–ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து அமெரிக்காவின் 2–வது பெரிய சிகரெட் கம்பெனியான ஆர்.ஜெ.ரெனால்ட்ஸ் நிறுவனம் மீது நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சிந்தியா ராபின்சனுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்கும்படி தீர்ப்பளித்தது. அதில், சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வில்லை.இதன் மூலம் அனைத்து சிகரெட் கம்பெனிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இருப்பதாக சிகரெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி