சமீபத்தில் அனிருத் இசையுடன் வெளியான இப்படத்தின் டீஸர் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கும் நீல் நிதின் முகேஷின் தோற்றம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.’துப்பாக்கி’ படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்தார். அவருக்கு தமிழ் தெரியாது .அதே போல் ‘கத்தி’ படத்தின் வில்லனான நிதினும் படத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த வட இந்தியராக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நீல் மற்றும் விஜய் இருவருக்கும் ஆக்ஷன் அதிரடியில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் எதுவும் கிடையாது. ஆனால் இருவரும் தங்களது புத்திசாலித்தனத்தால் மட்டுமே சண்டையிடப் போவதாக நீல் நிதின் தெரிவித்துள்ளார்.
‘கத்தி’ படத்தின் கதைப்படி வில்லன் மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதாலும், இந்தப் படத்திற்காக தனது முந்தைய படமான ‘ஜானி கட்டர்’ படத்தில் நடித்த தோற்றம் தேவை என்பதாலும் 10 கிலோ அளவிற்கு தனது எடையைக் குறைத்துள்ளதாக நீல் நிதின் முகேஷ் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி