செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரத்தான ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழா…!

ரத்தான ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழா…!

ரத்தான ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழா…! post thumbnail image
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நடித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம் ‘அஞ்சான்’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா . படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இதைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.படத்தின் இசை வெளியீட்டு விழா கமல் முன்னிலையில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இடம் மற்றும் தேதி காரணமாக இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

23ம் தேதி முதல் ‘அஞ்சான்’ படத்தின் இசைத்தட்டுகள் நேரடியாக கடைகளில் கிடைக்கும். ” ஆகஸ்ட் 15ம் தேதி படத்தை வெளியிடுவதில் முழு கவனம் செலுத்துகிறோம்” என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் 22ம் தேதி காலை ரசிகர்களுக்காக சத்யம் சினிமாவில் ‘அஞ்சான்’ படத்தின் இரண்டு பாடல்கள் திரையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி