செய்திகள் மூக்கு இன்றி பிறந்த அபூர்வ குழந்தை!…

மூக்கு இன்றி பிறந்த அபூர்வ குழந்தை!…

மூக்கு இன்றி பிறந்த அபூர்வ குழந்தை!… post thumbnail image
இங்கிலாந்து:-பிரிட்டனை சேர்ந்தவர்கள் நாதன் கிரன்னி இவர்களுக்கு பிறந்த பெண்குழந்தைக்கு பிறக்கும் போதே மூக்கு இல்லை. குழந்தை டீசா தற்போது 17 மாதம் ஆகிறது.கன்ஜெண்டல் அர்கினிய. (congenital arhini) என்ற குறைபாட்டுடன் மூக்கு இல்லாமல் பிறந்த டீசா தன்னுடைய வாயின் மூலமே மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். இதுமாதிரியான குழந்தைகள் உலகில் இதுவரை 40 குழந்தைகள்தான் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசம் என்பதையே என்னவென்று அறியாத இந்த குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் தொந்தரவு இருப்பதாக இந்த குழந்தையின் தாயார் கிரன்னி கூறுகிறார். மூக்கு இல்லாமல் இருந்தாலும், தன்னுடைய குழந்தை எப்போது புன்னகையுடன் இருப்பாள் என்றும் அவளது அந்த புன்னகை விலை மதிப்பு இல்லாதது என்றும் கிரன்னி தன் மகள் குறித்து பெருமையாக கூறுகிறார்.

இந்த குழந்தையை பரிசோதனை செய்த பிரிட்டன் மருத்துவர்கள் செயற்கை மூக்கு பொருத்த ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த வருடத்தில் இந்த குழந்தைக்கு செயற்கை மூக்கு பொருத்தப்படும் என்றும், விரைவில் மற்ற குழந்தைகளை போல தனது மகளும் வாசனையை நுகர்வாள் தாய் கிரன்னி கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி