இந்நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி சமீபத்தில் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தில் படத்தின் நாயகியான தேஜஸ்வி ஒரு நிர்வாண காட்சியில் நடித்திருக்கிறார் என்றும், அந்த காட்சி படமாகும் போது கூட அவரே கேமிராவை ஆன் செய்து நடித்து விட்டு பிறகு ஆஃப் செய்தார் என்றும் செய்திகள் வெளியாகின. அந்தக் காட்சியை இதுவரை இயக்குனர் மட்டுமே பார்த்திருக்கிறார் என்றும், படம் வெளியானால்தான் மற்றவர்கள் பார்க்க முடியும் என்றெல்லாம் கதை அளந்தார்கள்.
கடந்த வெள்ளியன்று படம் வெளியாகி இந்த நிர்வாணக் காட்சிக்காகவே ரசிகர்கள் திரையரங்கை மொய்த்திருக்கிறார்கள். கடைசியில் பார்த்தால் அப்படி ஒரு காட்சியே படத்தில் இல்லையாம். அந்தக் காட்சியை நம்பி தியேட்டருக்கு வந்தவர்கள் எல்லாம் ராம் கோபால் வர்மா மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி