இந்த பட்டியலில் இப்போது இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளார். ஆர்யா–அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்தை அடுத்து அதே நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கப்போவதாக முன்பு சொன்னார். அதனால் சிம்பு-திரிஷாவை வைத்து அந்த படத்தை இயக்கப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு கூறி வந்தார்.ஆனால், இரண்டாம் உலகம் படம் பெரும் நஷ்டத்தை கொடுத்து விட்டதால், அப்படத்தை தயாரித்த நிறுவனம் பின் வாங்கி விட்டது.
அதனால், வேறு தயாரிப்பாளர் தேடி அலைந்து கொண்டிருந்த செல்வராகவனுக்கு யாரும் சிக்காததால், இப்போது தனது அடுத்த படத்துக்கு அவரே தயாரிப்பாளராகி விட்டார். அந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம். கதை விவாதத்தை மட்டும் தற்போது நடத்தி வருகிறார் செல்வராகவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி