செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…

தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…

தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!… post thumbnail image
சென்னை:-34 ஆண்டுகளுக்கு முன்பு டி.ராஜேந்தர் இயக்கிய படம் ஒருதலைராகம். அந்த படத்தில் நாயகனாக நடித்தவர் ஷங்கர். அவர் தற்போது மணல் நகரம் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஒருதலை ராகம் பட நாயகன் ஷங்கர் இயக்கியுள்ள முதல் தமிழ் படம் என்பதால், ஒருதலைராகம் படத்தின் டீமும் கலந்து கொண்டது. டி.ராஜேந்தர். ஒளிப்பதிவாளர் ராஜசேகர், ஷங்கர், ரூபா, தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் டி.ராஜேந்தர் பேசுகையில், இந்த தருணத்தில் 34 ஆண்டுகளுக்கு பின்னோக்கி என் மனம் செல்கிறது. நாயகன்-நாயகியை கடைசி வரை சுண்டு விரல்கூட தொடாமல் நடிக்க வைத்தேன். நாயகியை பேசவே விடவில்லை, மொத்த பாடலும் ஹீரோவுக்கே கொடுத்து விட்டு நாயகிக்கு ஒரு பாடல்கூட கொடுக்கவில்லை. ஆனால் கண்களால் நடித்திருந்தார் ரூபா. அந்த படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பும் ஒரு முக்கியமானது. அதனால்தான் பெண்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்தார்கள்.மேலும், அப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில் ஒரு கலாசாரம் இருந்தது. காதலை உயிரோட்டமாக சொல்லப்பட்ட காலம் அது. ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. ஜீன்ஸ் போடாமல் எந்த ஹீரோவும் நடிப்பதில்லை. யதார்த்தத்தை மீறி நிற்கிறது தமிழ் சினிமா. மேட்னி ஷோவில் பார்க்க ஆரம்பித்து, ஈவினிங் ஷோவில் காதலித்து, நைட் ஷோவில் காதல் கணக்கை முடிக்கிற காலமாகி விட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது.

ஆனால், கேரளாவில் அப்படியில்லை. இன்றைக்கும் கலாசாரம் மாறாத கதைகளை படமாக்குகிறார்கள். அங்குள்ள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டியெல்லாம் கதைக்கேற்ப வேஷ்டி அணிந்து நடிக்கிறார்கள். பழைய சைக்கிளை ஓட்டிச்செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் ரியாலிட்டி உள்ளது. கூடவே செண்டிமென்ட் கதைகளையும் அங்குள்ள மக்கள் ஆதரிக்கிறார்கள். அதனால்தான் மலையாள சினிமா இன்றுவரை யதார்த்தமாக வந்து கொண்டிருக்கிறது. இப்போதும் நான் நல்ல படம் பார்க்க ஆசைப்பட்டால் மலையாள படங்களைத்தான் பார்க்கிறேன். ஆனால் மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. கதைகளும், காட்சிகளும் ரியலாக உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் பேமிலி செண்டிமென்ட் படங்கள் இப்போதெல்லாம் ஓடுவதே இல்லை.

மேலும், கர்நாடகத்தில் இப்போது ஒரு படத்தின் திருட்டு விசிடிகூட வருவதில்லை. ஆந்திராவில் மக்களே தியேட்டர்களுக்கு சென்றுதான் படம் பார்க்கிறாரக்ள். கேரளாவில் நல்ல படங்களாக வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலை இல்லை. படம் வந்ததுமே திருட்டு விசிடிக்கள் கடைகளுக்கு வந்து விடுகின்றன. மூட்டையில் கொண்டு சென்று காய்ந்த கருவாடு மாதிரி சிடிக்களை கொட்டுகிறார்கள்.
இந்த திருட்டு விசிடிக்களை மக்கள் ஆதரிக்க இன்னொரு காரணமும் உள்ளது. தியேட்டர்களில் டிக்கெட் விலை கடுமையாக உள்ளது. ஒரு குடும்பம் படம் பார்க்க வேண்டுமென்றால் 2 ஆயிரம் செலவாகும். ஆனால் ஒரு சிடி 50 ரூபாயில் முடிந்து விடுமே. அதனால்தான் மக்கள் தியேட்டர்களுக் வருவதை குறைத்து விடடார்கள். இதனால் தயாரிப்பாளர்களும், படத்தை வாங்குபவர்கள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இந்த நிலையை மாற்றத்தான், தற்போது படத்தை சிடிக்களாகவே வெளியிடலாம் என்ற முயற்சியை சில இயக்குனர்கள் இணைந்து செய்கிறார்கள். இது எந்த அளவுக்கு சக்சஸ் ஆகும் என்பது பின்னர்தான் தெரியும்.
இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி