புதுடெல்லி:-தெற்கு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டு 45 சதவிகித மக்கள் வறுமையில் வாடுவதாக கூறப்பட்ட நிலையில் 2010ல் அது 14 சதவிகிதமாக குறைந்தது. இருந்தபோதிலும் சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் 32.9 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுவதாக ஐ.நா சபையின் புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
அதே போல் 2012ம் ஆண்டின் புள்ள விவரங்களின்படி குழந்தை இறப்பிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 1,40,000 பேர் தாங்கள் பிறந்த ஐந்தாவது ஆண்டிற்குள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டில் உலக அளவில் 6.6 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தெற்காசியாவில் மட்டும் 2.1 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி